செங்கொடியாகிய நாங்கள்

எல்லா 
பெருங்கனவுகளும் 
அடங்கியபின்
ஒரு எளிய
சமரசத்தினால்
எல்லாவற்றையும்
மறக்கடிக்க முடியுமென 

நினைக்காதீர்கள் தோழமைக் கட்சிகளே...
செங்கொடிகள்
நெருப்பு மலர்களை
பற்றியபடி
உங்களை நோக்கி
புன்னகைத்து கொண்டிருக்கிறார்கள்...
ஒரு யுக மாற்றத்தை
தடைகளை உடைத்து
நடுச் சாலையில்
எழுத ஆரம்பித்துவிட்டனர்...
சொகுசு காரில் இருந்து
இறங்காமல் திரும்பிச் செல்வதே
உங்களுக்கு தற்போதைக்கு நலம் பயக்கும் அரசியலாகும்...
எங்களின் மெல்லிய இதழ்களில்
ஆக்ரோஷ கேள்விகளை
நீங்கள் இதுவரை
கேட்டிருக்க மாட்டீர்கள் தான்
என்செய்வது
இம்முறை புரட்சி எங்களிடமிருந்து
துவங்கியதாய்
எண்ணிக்கொள்ளுங்கள்
என் அருமை அரசியல்காரர்களே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி