இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது

படம்
மழை தூறுவது நின்றிருக்கிறதா என்பதை அறிய ஜன்னலின் வழியே கொஞ்சம் கை விரல்களை காற்றில் மிதக்கவிட்டு ஸ்வரம் பிடித்து பார்த்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன். எனது நிறுத்தத்தில் கண்டிப்பாய் நின்றிருக்கும் மழை என்ற அனுமானத்துடன், நிறுத்தம் வர இன்னும் ஒரு நிறுத்தத்தை கடந்தாக வேண்டும். இருக்கையிலிருந்து எழுந்து நிற்க துவங்குகிறேன் . படிக்கட்டினை விட்டு கொஞ்சம் தள்ளி ஒரு கையில் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தின் பிடித்ததின் நீள்கம்பியினை பற்றியவாறு நின்றவள், டிக்கெட் எடுக்க சில்லரையினை தேட துவங்குகிறாள் உரையாடலினை தொடர்ந்தவாறே.. கைகளில் உடனடியாக மாறிக்கொள்ள விருப்பமிலா நாணயம் வர மறுக்கிறது. எங்கமா போவனும் ? தனக்கென ஒதுக்கப்பட்ட சீட்டின் அருகே வந்து நின்றவாறு கேட்டார் கண்டக்டர், இந்த முறை மாட்டி கொண்டது நாணயம் அவளிடம், உரையாடல் இன்னும் தொடர்கிறது. விரலிடுக்கில் சிக்கி இருந்து பின் எடுத்து இரு விரல் பற்றி நாணயத்தை நீட்டுகிறாள் 'ஒரு சோழிங்கநல்லூர் '. நான் இறங்க பிரயத்தனபடுகிறேன், உரையாடல் இன்னும் தொடர்கிறது, என் நிறுத்தத்தில் மழ