இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாவணி தேவதை

படம்
நேர் வகிடெடுத்து தலை வாரி நெற்றியில் சாந்திட்டு கனகாம்பரங்களும் செம்பருத்திகளும் சூடி... பாந்தமான அழகியல் கொஞ்சும் கண்களும் எண்ணை வழிந்த முகமெனினும் எழில் இனிப்பாய் சிரிப்பும்... நெற்றி சுருக்கி சற்றே தலையசைத்து விட்டு ஓடிச் செல்லும் வெட்க சிந்தலும் நிதான நடையின் சிதறா கவனம்... இளஞ்சிவப்பு பச்சை ஊதா என கிராமியத்தின் வண்ணங்களில் கலரிடும் கனவுகளை சுமந்த தாவணிகளை... தவறி மறந்தே இறக்கடிக்கபட்டு விட்டனவோ தமிழ் தேவதைகளின் முதல் அடையாளம்-தாவணி... தற்பொழுது பண்டிகைகளிலும் தேர் திருவிழாக்களிலும் ஆங்காங்கே தோன்றி மறையும் தோற்ற மயக்கங்களாகிப் போயின...  -ஈ.பிரபாகரன். சமர்ப்பணம் இன்றும் தாவணியை உடுத்தியிருக்கும் கிராமத்து கன்னி தேவதைக்கும்... என்றோ தாவணியை நினைவுகூறும் நகரத்து நளின தேவதைக்கும்.....

காதல் நுனி

படம்
நீ எனை நினைத்து நடந்து கொண்டிருக்கையில் எதேச்சையாக உன் கைகளின் தொடுதலிலும் கரம் பட்டும் நீ பற்றி எடுத்த ஒற்றை புல்   உன் இதழ் தொட்ட முதல் முத்தத்தில் முறிந்து போய் நிறமிழந்து நிலம் இறங்குகிறது;  நுனி முறிவு -ஈ.பிரபாகரன்.  

காதல் சில்

படம்
கைகளில் ஐஸ்கிரீம்  கரைந்துகொண்டிருக்கிறது -காதல்  கண்ணாடி மழையாக;  நனையாமல் ஈரமாகி  ததும்பி வழிந்துவிட்டது -இதயம்  சிரிப்பு சில்லுகளாய்; -ஈ.பிரபாகரன்.

காதல் தேடல்

படம்
தேடி தேடி திரியும்  உன்னை காதல் கண்ணாடி; வழி எதிரினில் வந்து  என் இமைகளை கடந்து விழிகளில் தொலைந்து   இதயத்தில் நுழைந்தாய்... என்றும் என்றென்றும்  காட்டும்  என் கண்கள்  ஒளிநகலாய் பதிந்திட்ட  உன் மோகன முகநிழலை... உன் இதய தேடல் ஆராய்ச்சியில்  என் கண்கள் ஊடல் ஆயாச்சு... காலை பனியில் காற்று நான் மேக மோதலில் கலந்திடுவேன்; கரைந்து காதல் உரைத்திடவா உயிரே உன் னுடன்  உறைந்திடவா... மண் தொட்டதும் குளிர்-ஈரம்;  மழை கொட்டுது மன-ஓரம்... பாவையின் பார்வை பட்டு போகும் ஞாபக தோகை தொட்டு தழுவும்... எதிலோ  எதிரினிலோ; எங்கோ  இங்கங்கோ; தேடுகிறேன் எனை நான்  தேயும் தொலைவினிலும்  நான் தெரியவில்லை... பிறையின்  அருகினிலும்  என்  பிரியமில்லை... அலையாய் அலையாய்  அலைந்தேன் நான்... காதல் தாகத்தின்  தருணத்திலே   நீர் உனதருகில் வந்தேனே... இறுதி யாய்  இதழ் மொழிந்தது  நான்  தொலைந்தது   உன்னில்  பின் எனை கண்டேன் உன் கண்ணில்... ஈ.பிரபாகரன்.

காதல் நடை

படம்
  இயல்பாக பேசி செல்கையில் எதேச்சையாக திரும்பி ஒரு சிட்டிகை  இதழ் சிறகை காற்றில்  சிரித்து  உதிர்க்கிறாய்; நீ உணர்ந்திருக்க  வாய்ப்பில்லை;  நிலைதடுமாறி அதிர்ந்த  என் நெஞ்சின்  நொடி நிலநடுக்கத்தினை...  -ஈ.பிரபாகரன்.   

காதல் ஈரம்

படம்
நிழற் குடையில்  நிற்கிறாய்  நீ... நின் முகம் காண  மழையாய்  நான்... நனையும்  உனது பாதங்களை  நினைந்து;  நிற்கிறாய்  ஓர்துளி... பின்  நகர்கிறாய் நாணத்துடன்; என்னுடன் நனைய நித்தமும் நீயேயென...  -ஈ.பிரபாகரன்.

காதல் கடிதம்

படம்
எழுத்துக்களினூடாக எத்தனை எத்தனை நினைவுகளை விதைக்கிறாய் உன்னை படிக்கையில் தோன்றிடும் காட்சிகள்  எல்லாம் வானவில் கோலங்கள்; சிறுநேரம் சிந்தை மயங்கி உன்னிடம் தேடும்... காற்றில் காதலாகி கண்களில் மின்னி இதழ் எழுத்துக்களால் கனவுகளின் கதவுகளை பேனா சாவியிட்டு நுளைவிக்கிறாய்... என்னுள்ள  பிரியங்களை எப்போதும் சொல்லும் கண்ணாடி பிம்பங்களே நீ எனக்கு எழுதிய கடிதங்கள் யாவும் இப்படிக்கு,  மயிலிறகுகளின் தேவதை என நீ எழுதி வருடியது... (இன்னும் இருக்கிறது குட்டியிடா ஒற்றை இறகு) ஈ.பிரபாகரன்.

காதல் சமிக்ஞை

படம்
இமைகள் மூடியே  இதழ் மலர்கிறாய்  பூக்கும் பூவை-நீ  மகரந்த மழை-நான்...  கண்கள் சிமிட்டியே  கன்னம் சிவக்கிறாய்  மருதாணி மகள்-நீ  விடியல் பகல்-நான்...  இதயம் திறந்தே  இசையாய் நிறைந்தாய்  பாயும் குருதி-நீ  பச்சை நரம்புகள்-நான்... ஈ.பிரபாகரன் 

காதல் வதம்

படம்
படைசூழ வலம் வந்தாலும்  கடைக்கண் பார்வை வாள்கொண்டு  வதம் செய்கிறாய் இதமாய்...  யாரும் பாராமல் பார்த்து   விரல் மொழியில் பேசி  விழியாலே விழ வைக்கிறாய்... நெருங்கி எதிரினில் வந்து  இதழ் உதிர்க்கும் சிரிப்பால்  இதய சிறை இடுகிறாய்... -ஈ.பிரபாகரன். 

காதல் இயற்கை

படம்
   ஏதேதோ  பேசிக் கொள்கிறது காற்று;  விழிகள்  மொழியிலா மௌனத்திலே...  எதிரெதிரே  நின்று கொண்டது   மரங்கள்; முகம்  நிமிறா நிழலினிலே... மாறிமாறி  முரண்படும்  வானிலை; மனமெங்கும்   கணமிலா காதலினலையிலே... -ஈ.பிரபாகரன்.        

காதல் கனவு

படம்
ஆயிரமாயிரம் கனவுகள் வந்து  அணுஅணுவாய் காதல் சொல்லுதடி அகிம்சையாய் பார்த்திட்ட விழிகள்  என்னுள்ளே இம்சை செய்யுதடி... திசை தெரியாத தேசத்திலே  தினந்தினம் உன்முகம் தேடுகிறேன்  தொலைவினில் தெரியும் ஒளி நீயே  நடந்திட்டேன் உந்தன் வழியினிலே... சட்டென வீசும் தென்றலிலே  எனை தழுவிடும் பூவாசம் நீயே... ஓ...இதயமே  சொல் காதலினை  இனிவா..  வந்து என்னோடினை...  -ஈ.பிரபாகரன்   

காதல் கானல்

படம்
தொலைந்து தான் போயிருக்க கூடும் ; காகித சோலைக்குள் கவிதையாய் நான். எவ்வளவோ, எப்படியும் தேடியும் யாரும் கடைசிவரை காணவில்லை; எனை பத்திரமாக மறைத்திட்ட காதல் கானல் நீ. தொலை தூரத்தின் சரியான பிழை: காட்சி பிம்பம்: நாம்... -ஈ.பிரபாகரன்