இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறுதிச்சுற்று நிலவரப்படி

அது இப்படி இவ்வளவு மோசமாக நடந்திருக்கக்கூடாது; இல்லை இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது; பாவம் இந்தமுறையேனும் அவன் காப்பாற்றபட்டிருக்க வேண்டும். தனி ஊசலாடும் நினைவுகளை ஒன்று திரட்டி கண்களில் இரத்தப்படலத்துடன் நெடிவீச்சத்தை தாண்டி குறுக்குவெட்டுப்பட்டும் நிதானித்து ஏழு ரெண்டு மைல் கடந்து Yes I've Made It என ஆங்கிலம் கலக்காமல் அதிசயம் தான் ஆனாலும் இதோ அடைந்துவிட்டேன் என் இலக்கை என்று தமிழில் சொல்ல நினைத்திருந்தான் நந்தகுமாரன். என்ன செய்வது இந்த முறையும் ஆறு பேப்பர் அவுட்!

ஐந்து நிமிடத்தில் மூன்று கனவுகள்

நீர் நிரம்பி வழியும் கிணறொன்றில் ஒரு நான்கு ஐந்து பேர் கயிறொன்றை கட்டி அதை பிடித்து விளையாடிக்கொண்டிருக்கையில் ஒண்ணு ரெண்டு மூணு என எண்ணிக்கொண்டே ஒவ்வொருவரும் கயிறினை விட கடைசியாய் பிடித்து கொண்டிருந்த அவனும் விட்டுவிட நீரில் மூழ்கி மூச்சு முட்டுகிறது அவனுக்கு. அப்படியே ஒரு தொடர் போல எல்லோர் முகமும் ஒரு நொடி தோன்றி மறைகிறது. திடீரென ஒரு மாடி அறையில் இவனுடன் சேர்ந்து இன்ன சிலரும் நின்றுகொண்டிருக்க அப்பொழுதுதான் அவனுணர்கிறான் தான் மட்டும் பனியனுடன் நின்று கொண்டிருப்பதை; ஒரு அறைக்கதவு திறக்கபடுகிறது அங்கே ஒரு பெண் தான் அமர்ந்திருக்கும் இருக்கையிலிருந்தபடி இவனை நோக்கி திரும்பியதும் i'l be back என்று சொல்லி மாடிப்படி இறங்க எத்தனிக்கையில் சட்டென மாடிப்படி பாதியில் துண்டாகி வேறொரு இடத்தில இணைகிறது. Loading p......@gmail.com... மேரேஜ் இன்விடேஷன் என்ற சப்ஜெக்ட் லைனுடன் திருமண அழைப்பிதழின் அட்டாச்மென்ட் பிடிஎப் வடிவில் இருந்தது... ஹேய் எனக்கு கல்யாணம் என ஆங்கிலம் நிறைந்த எழுத்துக்கள் நீளும் ஒரு ஈமெயிலை படித்துக்கொண்ட

காற்றில் கசியும் காதல்

* டேய்ய்? ஆச..ஆச... நிஜமாவா? ஆங்..பொய்யி.. ம். இப்ப என்ன வேணும் உனக்கு?? ச்சீ! ம்ஹும்! மாட்டேம்போ. இப்ப இதொன்னுதான் கொறைச்சல்; போதும் போதும்!! இப்படி இன்னும் ஆயிரம் ஆயிரம் ஒரு வரி கவிதைகளை அவளிதழால் மட்டுமே சொல்ல முடியும்!  * காத்திருப்பின் தாமதங்களுக்கு சமாதானிக்க நான் தொடங்கையில் காலிறங்கி கெஞ்சுதல் எனக்காகியும் பின் ஊடலின் உச்சத்தில் கால் மீது காலிட்டு காதல்தாங்கி கொஞ்சுதல் உனக்காகியும் போகிறது எப்பொழுதுமே! * பேருந்துகளில் இருக்கையை ஒட்டிய பக்கவாட்டு கம்பியினை ஒருகை மட்டும் கோர்த்து பிடித்துக்கொண்டு பயணிப்பதும் ஒருவித அழகுதான் என்பது நீ பற்றிப்பிடித்திருந்த கம்பிகள் என்னிடம் மட்டும் சொன்ன இரகசியம்! * ஒரு இளமதிய பொழுதினில் சந்தித்து நமக்கு மட்டும் தனியான உரையாடலை தொடங்க அருகிலிருந்த ஐஸ்கிரீம் கடையை விட்டு எதிரில் இருந்த நெடுஞ்சாலை வேப்பமரத்தின் கீழ் கேரியர் நிறைந்த  இளநீருடன் யாருமின்றி நின்ற சைக்கிள்காரரை நோக்கி அழைத்துச் சென்று இருவரின் கையிலும் இள(மை) நீ(ர்)உடன் இயல்பாக நீ பேசியது தான் கேட்கிறது

நட்பியல்

* நட்பு வானம்! காதல் மழை! * ஆகச்சிறந்த சண்டைகள் நண்பனுடனும் அடிப்படை சமாதானங்களின் புரிதல்கள் தோழியிடமும் * கலைந்த தலையினை கோதிவிடும் தோழி அன்னையின் சாயலே * நண்பனுக்காக தான் எழுதிக்கொடுத்தேன் கன்னி காதல் கடிதத்தினை * ஆக்க்ஷன் படம் கூட காமெடி தான் நாம் கட்டடித்து பார்த்த போது * :) எழுதிய நூற்றி சில்லறையில் இப்போதைக்கு  ஒரு ஐந்து மட்டும் :)