இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னமும் மிச்சமிருக்கும் காதல் கவிதைகள்

படம்
<3 அவளறிந்த ஆகச்சிறந்த காதல் கலைகளில் அதிபிரதானமானது, மிக அனாயசமாக ஒரு மந்தகாசப் புன்னகையை உதிர்த்து எனைச் சாய்ப்பது. <3 நிசப்தம் கசியும் இந்தப் பின்னிரவில் தூக்கம் தொலைத்து கனவுகளற்று கதைக்கும் நமதிந்த இலக்கற்ற உரையாடல்கள் <3 உன்னுடைய கேபினின் டேபிளில் ஒரு கையினை மட்டும் ஆகஸ்மத்தாக கன்னத்தில் வைத்து 'என்னடா 'என்பது போல் எதிரில் நிற்க்கும் எனை பார்க்கும் உனதந்த நிமிர்ந்த விழிகள். <3 பின் அந்திப்பொழுதுகளில் உன் மீதான காதல் நறுமணம் அரும்பி ததும்ப துவங்குகிறது; இன்றைக்கு நாம் ஒன்றாக அருந்திய காபியின் ஒவ்வொரு மிடறு போல.. <3 மழை இரவுக்கு பிந்தைய அதிகாலையின் ஏகாந்தமான குளிர் காற்றின் ஸ்பரிசத்தினை போல கைகள் பற்றி என் தோள் சாய்ந்திருந்த சமயம்... <3