இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருளும் அவனின் விழிகளைப் பார்த்து திரளும் இவள் புன்னகை

விளையாட்டு பொம்மையென அந்தி மஞ்சள் சூரியனை உடைத்தெறிந்த பின் சிதறி கிடப்பது மாதிரி தெரு முழுவதும் மாநகராட்சி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்து கிடக்க,. டொரண்டினோவின் கில் பில் படத்தில் வரும் ஒரு காட்சியைப்போல நிசப்தம் கசியும் அந்த குறுகலான தெருவின் நடுவில் கொஞ்சமும் கலவரமில்லாமல் அவள் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கிறாள். வெதுவெதுப்பாக ஒரு குழி தோண்டி அதில் படுத்திருக்கும் நாயின் கண்களை கூர்ந்து கவனித்தவாறே மெதுவாக கடக்கிறாள் அந்த தெருமுனையை. அவள் சூடியிருக்கும் மலர்களின் நறுமணத்தினை அந்த நாயின் புலன்கள் நுகர்ந்தபின்னும் அவளை நோக்கி திரும்பாமல் எவ்வித அசைவையும் வெளிக்காட்டிகொள்ளாமல் அப்படியே விழிகள் உறைந்த மாதிரி சுகமாக படுத்துகிடந்தது. பொழுது, இப்பொழுது மெல்ல அதிகாலையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்கிறாள். சப்தமில்லாமல் அவனின் அறைக்கதவினை திறந்து உள்தாழிட்டுவிட்டு கண்களில் சற்று பதற்றத்துடன் மிக ஜாக்கிரதையாய் கைகளின் பின் அதனை மறைத்தபடி மெதுவாக அவனை நெருங்குகிறாள். இன்னமும் நீளும் அவனின் இரவின் கனவுகளில் இரத்தம் சொட்டச் சொட்ட அவனை நோக்

இளமதியங்களின் அரைமயக்கத்தில் வரும் தொடர்பில்லா கனவு

பேருந்தின் பின் பக்க கண்ணாடியில் பின் தொடர்ந்து வருகிறார்கள் அவர்கள் இருவரும்; அவள், அவன் முதுகின் மேல் முகம் புதைத்து ஏதோ ஒன்றை கதைத்து கொண்டே இருக்கிறாள் என்பதை யாரும் மிக சுலபமாக ஊகிக்க முடியும்.; பேருந்தின் உள்நின்றபடி இமைக்காமல் பார்த்துகொண்டு இருக்கின்ற இவளின் விழிகளுக்கு அவளின் முகம் சரியாக தெரியவில்லை. அதனாலென்ன ஒவ்வொரு சில நொடிகளுக்கும் அவன் முகம் அரும்பி அரும்பி மலர்வதில் அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அழகாகிக் கொண்டே இருக்கிறான்; பைக்கினை மிதமான வேகத்தில் ஓட்டி வரும் அவனும் அவன் பின்னிருக்கும் அவளும் அந்தக் காட்சியினை பார்த்துக்கொண்டிருக்கும் இவளும் ஒரு காட்சி ஓவியத்தில் நிறைந்திருக்கும் பலரில் எல்லோரையும் ஈர்க்கும் ஏதோ ஒரு பக்கத்தின் நிறைக்கும் பச்சை நிற வண்ணமாக இவள் எனக்கு தெரிகிறாள், இத்தோடு இரண்டு நிறுத்தங்கள் ஆயிற்று இவள் இறங்குவதாய் சொல்லி டிக்கெட் வாங்கிய நிறுத்தம் தாண்டி இதோ என் நிறுத்தமும் வந்துவிட்டது இப்போது நானும் என் நிறுத்தத்தினை கடக்கிறேன் அவர்களையும் அவளையும் பின்தொடர்ந்து கொண்டே..