இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னமும் இருக்கிறது காதல் இதைவிடவும்

படம்
<3 மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கையில் சட்டென திரும்பிப் பார்த்து சிரிக்கிறாய். அவ்வளவுதான் கவிதை <3 நீ அருந்திக்கொண்டிருக்கும் காஃபியின் ஒவ்வொரு மிடறும் திகட்ட திகட்ட காதல் <3 யாரோ உன் பெயர் அழைக்கையில் எனக்குள் அனிச்சையாக அரும்பும் அந்தப் புன்னகைக்கு என்னிடம் பெயரில்லை <3

ஒரே ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ந்தவைகள்

படம்
<3 ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரமொன்றில் பேருந்துக்காக காத்திருக்கையில் உன்னைப்போலவே ஒருத்தியை பார்த்தேன் அதுவல்ல ஆச்சர்யம், முதல்முறை நீ கேட்டது போலவே அவளும் சின்னச்சின்ன முகபாவனைகளுடன் கண்களில் தயக்கத்துடன் மெல்ல கேட்டால் உன்னைப்போலவே, கண்ணகிநகர் பஸ் வந்தா கொஞ்சம் சொல்றிங்களா? என்று அதுதான் ஆச்சர்யம் <3 மஞ்சள் கொன்றைப்பூக்கள் சிதறிக்கிடக்கும் மழைநின்ற அந்த ஈரச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாய். அவ்விடம் கொஞ்சம் கொஞ்சமாய் தேவதை வீதியாக மாறத் துவங்குகிறது <3 இப்போதைக்கு அந்தப்பூக்களை நீ எதுவும் செய்துவிட வேண்டாம். உன்னைப்பார்த்த வெட்கத்தில் தான் மலர்ந்திருக்கிறது கொஞ்சம் மணம்விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் <3 பூங்கா பூட்டப்பட்ட பின் வெளியே இருக்கும் நிழல் மரத்தில் சாய்ந்தபடி இருவரும் கைகள் கோர்த்து விடைபெற மனமின்றி இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நீளாதவென பேசிக்கொண்டிருந்த அந்த சில நிமிடங்களின் காட்சி திரும்பத் திரும்ப வந்து போகிறது கனவில். <3

என் கேலரியில் ரகசியமாய் சிரித்து கொண்டிருக்கிறாள்

படம்
மிக அரிதாக காணக்கிடைத்த உன் தோழிகளுடன் நீ இருக்கும் சில புகைப்படங்களில் ஒன்றில், எல்லோரும் ஒருபோலச் சிரித்திருக்க நீ மட்டும் நெற்றியைச் சுருக்கி புன்னகைக்கிறாய். மற்றொன்றில் எல்லோரும் சிரிக்க தயாராகையில் அவர்களுக்கு முன் கழுத்தை பக்கவாட்டில் சாய்த்து கண்களை மூடியபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய். கடைசியான புகைப்படத்தில் இம்முறை புன்னகைக்காமல் மிக இயல்பாக இருக்கிறாய். வழக்கம் போல வலது ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொட்டு 'Save Photo' செய்கிறேன் புன்னகைத்தபடியே.

புன்னகையின் நறுமணம்

படம்
அடர் வெள்ளை நிறமாய்  தனிமை படர்ந்திருக்கும் இந்த இரவில் தூக்கமில்லாமல்  கண்களை மட்டும் மெல்ல சிமிட்டிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நாழிகையில் திடீரென நான் தொலைந்துபோகிறேன் எந்தப்பொழுது எந்தத்திசை ஏதும் தெரியாமல் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் யாருமற்ற அச்சாலையில் இருபுறமும் மஞ்சள் பூக்கள் காற்றில் சிதறி விழுந்து கொண்டிருக்கிறது. பின்னாலிருந்து யாரோ அழைக்க நான் சரியாக திரும்பும் சமயம் மீண்டும் எங்கோ பறந்து போய் விழுகிறேன் இந்த இடம் கொஞ்சம் பசுமையாய் இருக்கிறது அனேகமாக இது ஒரு மாலைப்பொழுதாக இருக்கலாம் அந்த மரத்தின் கீழ் எதற்கோ அழுதுமுடிந்து அமர்ந்திருக்கையில் என் எதிரில் ஒருத்தி வண்ண வண்ணப் பூக்களை என்னிடம் ஒவ்வொன்றாய் தந்த வண்ணமாய் இருக்கிறாள் எந்தவித உணர்வுமின்றி நான் வாங்கியபடியே இருப்பதை கவனித்தவள் ஒரு சமயத்தில் பொறுமையிழந்து என்னை கண்களை மூடச்சொல்லி ஏதோ புரியாத சொற்களை உச்சரிக்க துவங்குகிறாள் சற்றைக்குள் ஏதோ ஒரு நறுமண நெடியினை உணர்கிறேன் இப்பொழுது என்னை கண்களைத் திறக்கச் சொல்லி பணிக்கிறாள் அவளின் இருகைகளிலும் ஔி ஜூவாலை போல ஏதோ இருக்கிறது என் இருகைகளையும் பிடித்து அதை கொடுத்து

இன்னமும் இருக்கிறது காதல் இதைவிடவும்

படம்
காகிதக் கப்பல்கள் செய்து தரச்சொல்லிக் கேட்கிறாய். பாதியில் விட்ட மழைக்கவிதை எழுதிய காகிதங்களைத் தருகிறேன். ஒவ்வொன்றாய் மடித்து கப்பலாக்கித் தந்தபின் உன் கையிலிருந்து நீரில் மிதந்து போகையில் மின்னும் உனதந்த சின்ன சந்தோஷத்தில் மிக அழகாக முடிகிறது மறுபாதி மழைக்கவிதை. * கச்சிதமாயும் எளிதானதாகவும் அமையவில்லை, ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்த்தும் பார்க்காதது போல நடிப்பது ஏதேனும் ஒரு வகையில் எப்படியும் சொதப்பிவிடுகிறேன் இன்னமும். * எப்போதும் போல அனிச்சையாக நிமிர்ந்த ஒரு தருணத்தில் எதிரினில் நின்றுகொண்டு பேச்சுவாக்கில் மிக லாவகமாய் காற்றினை சிறை செய்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கிறாய் சின்ன சின்னதாய் புன்னகைகள் செய்து. *

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

படம்
* திசையற்று பறக்கிறது தட்டான்கள் மொட்டைமாடியில் வெகுநேரமாக நின்றபடியே நான் * ஈரத்தரையில் இமைக்காமலிருக்கும் தவளையின் விழியில் சரியாக விழுகிறது மழை * மரம் நடும் குழந்தையின் முகத்தில் இயற்கையாகவே துளிர்க்கிறது மகிழ்ச்சி விதை. * எண்ணெய் ததும்ப  எரியும் சுடர் விளக்கை எடுத்த எடுப்பிலேயே அணைக்கிறது மழை * எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது அடுக்கு மல்லியின் வாசம் நாங்கள் தான் இதுவரை  பேசியதேயில்லை. * சீசா விளையாடும்  குழந்தைகளுக்கு ஏற்றமும் இறக்கமும் சமசந்தோஷமே. * விட்டு விட்டு  பெய்கிறது மழை நகர்ந்து கொண்டேயிருந்தது நத்தை *