இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வண்ணத்துபூச்சி வாசல்

படம்
#பட்டாம்பூச்சிகளை பிடிக்கும் எனக்கு. பிடிபடாமல் சுதந்தரித்திருக்கையில்... #பூக்களுடன் மட்டுமே இதழ் முத்தங்களை பகிர்ந்துகொள்கிறாய்...    # வண்ணப்பூக்களில் அமர்ந்து கதை பேசுகையில்; நாளை நான் இறக்கையில் என் மீது நீ விழுந்து அழுவாயா என சிறகடித்து கண் சிமிட்டுகிறாய்... #வாசனையற்ற பூக்களின் மனம் யாவும் உனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... #மகரந்த துகளினை தூவி தினம் புதிதாய் பூக்கோலம் இடுகிறாய்... #நீ மட்டும் தான் வண்ணங்கலந்த உயிர்; வாழும் ஓவியம்... #சிறுவர்-சிறுமிகளுக்கெல்லாம் உன்னைப் பிடிக்க பிடித்திருக்கிறது; #ஜனநாயக நாடாம்; நாங்கள் இருக்கும்வரை இயற்கை பூவுலகை எங்கள் ராஜா ராணி தான் ஆளவேண்டும் சூளுரைத்தது பட்டான் படை :) #எல்லா விதமான வண்ண சட்டையிலும் மிடுக்காய் மிளிர்கிறாய்... #தொட்டாலே ஒட்டிக்கொள்கிறது உன் கலர் என் கைகளில்... -ஈ.பிரபாகரன்.

சூடாமலர் சூடி

படம்
!இப்போதைக்கு ரோஜாவும் மல்லிகையும் பொதுவாய் மிஞ்சியிருக்க பரவாயில்லை. !உன் வெள்ளந்தி சிரிப்பில் தான் வெட்கப் பூவின் இதழ் மலர்கிறது.  !காகித பூக்களின் மணத்தினை நீ பறிக்கையில் தான் என்னுள் வீசியது உன் மனம்.  !இப்போதெல்லாம் நான் பூக்களிடம் பேசுகிறேன் என்று சொல்லச் சொல்ல பூக்கிறது புன்னகை நீ சொல்லாமலே. !உன் உதிரிப்பூ புன்னகையில் உதிராமல் ஒளிந்திருந்து வீசுகிறது நம் காதலின் வாசம்.    

நிஜங்களின் நிழல்

ஐ-போன்களின்   தொடுதிரையின்  நழுவலில் நிரம்பிவழிகிற   'ஹஸ்கி' வாய்ஸில் முனகும்  காதல்  அவசர அன்பில்  இன்று  தொலைந்திடல் பிடிக்கும். நீண்ட குழாயின் தூரத்தின்   ஒரு  முனையில் பேசி மறு பக்கம்  கேட்கும் 'எக்கோ' வாய்ஸில்  எதிரொலித்த காதல் இனியென்று  தேடியும் கிடைப்பதற்கில்லை.. இன்னும் சாப்பிடலையாடா ??  அதுக்குள்ள எங்க போய்ட்ட லூசு ??  தூங்கிட்டியா செல்லம் ?? இப்படி அனுதினமும்  குறுஞ்செய்திகளின் கொஞ்சல்களுக்கு  மறுபதில் அனுப்பி பின்  மறையும் நினைவுகளில்  இயல்பாக பழகிவிட்டிருக்கிறோம்..   அன்புள்ள உயிரே  இதை எழுதுகையில்  இங்கே நல்ல மழை..  என எழுதும்  கடிதங்களுக்காக  நனையாமல் காத்திருந்த  நாட்களில்    பிரியத்தின்  ஞாபகங்களில்  எப்போதும்  காதல் ஈரத்தின்  அடர்த்தி குறைந்ததேயில்லை...      இப்படி இன்னும் எத்தனையோ  யதார்த்தங்களின் நிஜங்களை  நிராகரித்தும் புறக்கணித்தும்  நவயுக வாழ்க்கையின்  போலி நிழல்களுக்கு  இயல்பாகிப் போன  உங்களைப் போன்றோரில்  ஒருவன்தான்  நானும் ... -ஈ.பிரபாகரன்.