இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூ மரங்கள்

படம்
* எனக்கான பூக்களை என்றும் வீசுகிறாய் நீ. உன் தலையிலிருந்து உதிர்த்து. * * உன் மீது சாய்ந்தே என் இளைப்பாறல்-மனதிற்கு எப்போதும் விழும் ஒரு இலைத்தூரல்-சாட்சிக்கு. * * எத்தனையோ காதல் ஜோடிகள் பெயரை பச்சை குத்தி போயினர் அந்த பூங்காவின் பெருமரத்தில். * * உன் நிழல் மறைவில் பூவிதழ் தொட்டு சில முத்தங்கள் விளைந்தது. * * அவர்கள் பேசிய சில உரையாடல்கள் பேசாத சில மௌனங்கள். நீ கேட்டது. * -ஈ.பிரபாகரன்.

மீளாத நிசியில் வரும் கனா

பின்னிருந்து வந்து தன் கைகளால் சட்டென நம் கண்களை மூடி யாரென யூகிக்க சொல்லும் தோழியின் முதல் அறிமுகம்! வெட்கமும் நாணமும் எப்போதும் நட்புக்கும் இருக்கும் முதல் சந்திப்பில்.. முகம் சிவந்து போகும்; கண்கள் சிரிக்கும். எவ்வளவோ முயற்சித்தும் இதழில் சிரிப்பு வர மறுக்கும்.. கைகளின் குலுக்கல் பெரும்பாலும் பதட்டத்தில் வியர்வையின் ஈரத்தால் துவட்டப்பட்டிருக்கும்.. யாரிடமும் சொல்லாதே என்றுதான் பெரும்பாலும் சொல்லப்படுகின்றன ரகசியங்கள்.. கசிந்து உடைந்துபோகும் மறுநாளில் சத்தியமா நான் சொல்லலடா என்று பொய் சொல்லி ரசிக்கும் நட்பின் கோபத்தை.. ஏதுமற்ற சந்தர்ப்பங்களில் எல்லாமுமாய் இருக்கும் நண்பனின் அறிமுகம்! கல்லூரி விண்ணப்பத்தை நிரப்புகையில் தான் உன்னைப் பார்த்து எழுதத் தொடங்குகிறது மனம்.. நம்முள் நட்பெனும் முடிவற்ற புத்தகத்தின் முதல் எழுத்தினை பிள்ளையார் சுழியிட்டு.. தோள்பற்றி புன்னகைத்த நண்பனின் முதல் சந்திப்பு தினமும் திரள்கிறது ஏதேனுமொரு தருணத்தில்.. பகலில்லா இரவுகள் போல கொண்டாடிய பிறந்தநாள்.. விழியிரவில் நுழைந்து தூங்கிய வகுப்பறையின் பகல் பொழுதுகள்.. தோழனின் தோள்களில் சாய்ந்திருந்த நேரம் சீக்கிரமே முடி

பேசாத பிரியம்

படம்
வாழ்க்கையில சில விஷயங்கள் அப்படித்தான்!  சில பேர காரணமே இல்லாம பிடிச்சு போகும்.அவர்கள் என்ன செய்தாலும் ரசிக்க தோணும்.இந்த மாதிரி ஆதி அந்தமற்ற அன்புக்கு கட்டுப்பாடு, ஒரு வரையறை இவையெல்லாம் கிடையாது.அது இறுதிவரை சொல்லப்படாமலும் போகலாம்.ஆனால் என்றும் மறையாத பிரியத்தை பெறுவதற்கு நம்மில் எத்தனை பேர்க்கு வாய்த்திருக்கிறது... உமா நடந்து வருகையில் விளக்குகள் துளிர் விட துவங்கி இருந்தது.கண்களில் மின்னி எதிர்பட்டது மாநகரின் ஒரு பெரும் ரெஸ்டாரண்ட். அதைச் சுற்றிலும் கண்ணாடி சுவரில் நீர் வழிந்து மெல்லமாக மங்கிக்கொண்டிருந்தது மாலையெனும் பொழுது. உள்ளே சீரான இடைவெளியில் கைகளில் கோப்பையுடன் இன்றைய நவீனத்தின் முகங்கள் ஜோடியாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கடந்து சென்றாள்.  அவளுக்கு அது ஒன்றும் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்திவிடவில்லை. அது எப்போதும் போல வழக்கமான காட்சி தான். சட்டென ஏனோ தானாக சிரித்துக்கொண்டாள்.  அதன் பின்னூட்டங்களில் ஒளிந்திருப்பவன் கதிர். ஆமாம் உமாவுக்கு கதிர் மேல் பெயரிடா பிடித்தம் இருந்தது. ஏன் என்றால் தெரியாது.  அது அப்படித்தான் காரணமெல்ல