இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவ்வளவு ரம்மியம் அவள் புன்னகை

<3 மேகங்கள் சூழ்ந்த மெக்சிகோவின் இன்றைய நடுமதியத்தின் அதே நேரம் இங்கு பனியாய் குளிரும் நள்ளிரவு. இன்றைய தினத்திற்கான பணிகள் எல்லாம்  முடிந்தபின், நீண்ட காத்திருப்பின் பிறகு எனக்கெனவே அனுப்பியது போல, நான் மட்டும் இருக்கும் அப்பேருந்தில் நடத்துனருடன் சேர்த்து மூன்றே பேர் பயணிக்கும் இந்த நள்ளிரவு ஏனோ சற்று சுகந்தமான ஒரு மனநிலையை தருவதாய் உணரத் துவங்குகிறேன். பாதி பயணத்தில் என்மீது வீசும் இந்த ஜன்னலோர பூங்காற்று அப்படியே உன் புன்சிரிப்பை என் மூச்சுக்குழல் வழி நுழைத்து இதயத்தை மையலால் மீட்டுகையில் கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசம் பரவ மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்கிறது இந்நாள். சரியாக மாலை நேரத்தில் இணைக்கிறது உன்னையும் என்னையும் மீளும் மறு சுவாசத்தில் மலர்கிறது மீண்டும் அதே ரம்மியம் குறையாத புன்னகை உனதிதழ்களில், பிண்ணியில் இசைக்கும் இளையராஐாவின் நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் பாடலுடன் நீள்கிறது என் மறுபாதி பயண தூரம் <3