இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு ஆரஞ்சு ஜூஸ்ஸுக்காக காத்திருக்கையில்-I

ஆறாம் தளத்தின் படிகளிலிருந்து இறங்கையில் மதியம் தனது கடைசி தருணத்தில் இருப்பது கண்ணாடி ஜன்னலின் வழியே நன்றாக தெரிந்தது. நான் ஒவ்வொரு படியாய் இறங்க இறங்க..கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாக துளிர்க்கிறது அந்தி மஞ்சள் வெயில். இதோ ஐந்தாம் தளத்தின் திறந்த கதவுகளை கடந்து காபிடேரியாவினுள் நுழைகையில் அங்கு பரவியிருக்கும் அந்த குளிர் காற்று ஒரு சுகந்தமான சூழலை அந்த பெரிய வளாகம் முழுதும் நிரப்பி வைத்திருந்ததது. நேராகச் சென்று வலது பக்கக் கடைசியில் இருக்கும் ஜூஸ் கடைக்காரரிடம் அண்ணா "ஒரு லெமன்" என்றேன், லெமன் இல்லை ஆரஞ்சு, சாத்துக்குடி தான் இருக்கு என்றார். ஒரு ஆரஞ்சு என சொல்லிவிட்டு கடைக்கு முன் இருக்கும் நிறைய காலியான நாற்காலிகளிலல் மேஜையின் ஓரத்தில் இருக்கும் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தேன். என் எதிரில் இருந்த அடுத்தடுத்த மேஜைகளில் மொத்தமாக மூன்று அருந்திமுடிக்கப்பட கண்ணாடி குவளையில் ஒரு பச்சை இரண்டு ஊதா நிற ஸ்ட்ராக்களுடன் இன்னமும் இடத்திலிருந்து எடுக்கப்படமல் இருந்தது. ஐந்து யுவதிகளும் ஒரு இளைஞனும் தற்போது காபிடேரியாவின் வலது பக்கமாய் அந்த கண்ணாடி அறைக்கு முன்னிருக்கும் மேஜையை