இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானிருப்பேன் நிழலாக

அணு அணுவாய் உனை தொடர்கிறேன் எப்போதும் இப்பிரபஞ்ச தோட்டத்திலே என் ஆகாய குடை விரித்து மதியெனும் முகமுடையாள் உனையே... நட்சத்திர மின்மினியுடன் உன் ஒளிர் முகம் மலர்ந்திட விழித்திருப்பேன் விடியும் வரை மேகமெனும் நிழலாய்... மேகத்துக்கு ஜலதோஷம்-நீ மழைக்கால குளிர் நனைதலில் நனையாதிருக்க சட்டென்று திறந்தது என் இதய குடை காளான்... காதல்மழை எனை நனைத்திருக்க என் இதயவேர்களை உன் கைகளால் பற்றிப் பிடித்திருக்கிறாய் பத்திரமாக நனைதல்கள்  யாவும் எனக்கும் என் நிழல்மரங்கள்  என்றும் உனக்குமாய்...