இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீட்சி

இந்த முறை கண்டிப்பாய் ஜெயித்துவிடுவோம் என்று எனக்கு நானே என்னுள் சொல்லிக்கொண்டது எத்தனையாவது முறையென்பது தெரியவில்லை. சிறிது நேரம் வெள்ளை நிற பேருந்தின் வரவிற்காக காத்திருந்தேன்.அதற்குள் இரு பேருந்துகள் அதே வழியில் கடந்து சென்றுவிட்டது.இருப்பினும் வெள்ளை நிற பேருந்தின் கட்டணம் தான் எனக்கு சரியானது.இம்முறை சாலையை நிமிர்ந்து பார்த்தபொழுது மூன்றாவதாய் வந்ததது எனக்கான பேருந்து. படியேறி உள்ளே சென்று கொண்டிருக்கையில்,நிறுத்தத்தில் இருந்து சற்று தூரம் தாண்டி ஓடி வந்து ஒருவன் ஏற, இன்னொருவன் ரைட்! ரைட்!! போலாம் என்று பேருந்தின் பின்புறத்தை தட்டி, மச்சி! “ஆல் தி பெஸ்ட், நல்லா பண்ணுடா” என்று சொல்லி கை அசைத்து வழியனுப்பினான். அவனுடைய நண்பனின் முகம், இந்தவாட்டி “சூர் ஷாட் மாப்ள!” என்ற அவனது நம்பிக்கை வரிகள் இவையிரண்டும எனக்கானதும் கூட. பேருந்தை விட்டு நான் இறங்கியபோது கிட்டதட்ட ஒரு ஊரை விட்டு வேறு ஊர் வந்து இறங்கியதைப்போல இருந்தது. புதிய இடத்தினை கண்டுபிடிக்க வழி கேட்கும் படலம் சுவாரஸ்யமானது. அதிலும் இப்பொழுதெல்லாம் பெருநகரத்தில் எல்லோருடைய காதுகளிலும் இயர்போன்கள்! அநேகமானோர் தற்காலிக