இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மழைமதியப்பொழுதில்

மதிய வெயிலை உதிர்த்து மழையாய் தூவுகிறது நீலமற்று மெதுவாய் நகரும் கார்முகில் தார்ச்சாலையில் விழுந்துடையும் மழை முத்தத்துளிகள் வெப்பச் சூட்டில் உடனுக்குடன் நிலைகுலைந்துபோகின்றன சாலையெங்கும் வண்ணவண்ணமாய் சட்டென திறக்கிறது மழைக்குடை காளான்கள் நிறுத்தத்தில் நிற்பவர்களின் நெருக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது கணிசமாக. கொஞ்சமாய் நனைந்ததில் குளிர் பரவ இதழ்கள் :ஷ்" ஷெனவாகி பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன, சைக்கிளை டீக்கடை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டே அண்ணா ரெண்டு?, உனக்கு டீயா? காபியா? "டீ" என்றதும் "ஸ்ட்ராங் ஆ ரெண்டு டீ" என்றாள் சுசீலா.

குருதி இசையின் சில நிசப்த ஸ்ருதிகள்

என் இசைத்தட்டில் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் கீதம் ஒரு மலரும் அதிகாலையை மிக ரம்மியமாய் கண் முன் காட்சிப்படுத்தும் அதேவேளையில் ரத்தம் தெறிக்க நடந்தேறிக்கொண்டிருக்கிறது அந்த தாக்குதல். சரியான நேர திட்டமிடலுடன் எப்போதும் போல மருத்துவமனையில் அன்றையதின பணிகளில் மூழ்கிப்போய் இருந்தாள் அவன் மனைவி. அடுத்தடுத்த தொடர் தாக்குதலில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நிலை மோசமடைந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோதிலும் அவன் இம்மியும் தளர்வதாய் இல்லை. இதோ எதிரியினை வீழ்த்தி உடலெங்கும் ரத்த சகிதமாய் சரிந்து கிடக்கிறான் அதே இடத்தில். கடைசி சுவாசங்களை உள்வாங்கியபடி, விழிகள் திறந்தே இருக்கிறது. தன் பாட்டியின் அரவணைப்பில் இருந்து இப்போது நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது அவன் குழந்தை. இதோ என் இசைத்தட்டில் அடுத்த பாடல் இசைக்கத் துவங்குகிறது.

தண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்

மிகச்சரியாக வாழநினைத்து இப்போது தண்டவாளத்தில் ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கிறது அவனின் உடல் தசைகள் தொடர்பற்று; ரத்தசிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது. சுற்றி நிற்பவர்களின் அனேக அனுமானங்களும் சில நிஜங்களும் குறித்துக்கொள்ளபடுகின்றது அவனின் கதைக்கான கடைசி அத்தியாய பக்கங்களை நிரப்புவதற்காய். இதோ அவன் வந்துவிட்டான் சுற்றி நிற்கும் அனைவருக்கும் ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு அவன் வேலையை ஆரம்பித்தான் தசையின் வாசம் அவனது நாசிகளுக்கு எந்த நெடியையும் ஏற்படுத்தவில்லை; ஒவ்வொரு துண்டுகளையும் பார்த்துப் பார்த்து மிகச்சரியாக எடுத்துக்கொண்டிருந்தான். அங்கிருப்போரின் அழுகுரல், விசாரணைகள், எதுவும் அவன் செவிகளுக்குள் இறங்கவில்லை. மொத்தமாக எடுத்து ஓலைக்குள் வைத்து அவிழாமல் அதே சமயம் இறுக்கங்கலற்று மடித்துக்கட்டி முடிந்துவிட்டதாய் சமிக்ஞை செய்கிறான் பீடியைப் புகைத்தவாறே... அந்த இடத்தின் கடைசிக்காட்சியாக அவன் கைகளில் சில நூறு ரூபாய்களுடன் நடந்து போயகொண்டிருக்கிறான் ஒரு முழுவாரத்தின் பசித்த வயிறுடன்.

எனப்படுவது,யாதெனில்?

<3 கூட்டமாய் எல்லோரும் நிற்கையில் அதிமிகு கவனமாய் யாரும் பார்க்காமல் என்மீது அவள் வீசும் அந்த ஒருநொடி ஓரவிழிப்பார்வை. <3 லிப்ட்டின் கதவுகள் திறந்த பின் மெல்லிய புன்முறுவலுடன் கையசைத்து அவள் சொல்லிச் செல்லும் "டாட்டா" <3 Café Coffee Day-யில் கைகளில் வைத்திருக்கும் காப்பி கோப்பையில் ஸ்டிர்ரரில் இதழ்வழி காற்று செலுத்தி அதில்மேலெழும் சிறு சிறு குமிழ்களில் தன் முகம் தெரிகிறதென என்னிடம் சொல்வது <3 அதிகாலை சோம்பலுடன் அவள் குரல் கரகரப்பில் சொல்லும் "என்னடா காலங்காத்தால" <3 நடந்து செல்கையில் சற்று நிதானித்து ஒரு புருவம் துருத்தி, சில நொடிகளுக்கு பின் அவள் உதிர்த்திடும் சிறு புன்னகை. <3 கொஞ்சம் நிசப்தமான அலுவலகத்தின் இன்றைய நாளில் Evening "கோயிலுக்கு போலாமா?" என்று Communicator-ல் வரும் Message <3 'செம்ம கோவத்துல இருக்கேன் தயவு செஞ்சு போய்டும்மா' என சொல்லும் போது விழிகள் விரிய புருவங்கள் உயர்த்தி 'அட போடா லூசு' என்ற அவளின் ஒற்றை பிரதிபதில் <3 "ப்ச் மறந்த