இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் பரிட்சை

படம்
அன்று தேர்வு நாள் அவசர அவசரமாக படித்து கொண்டிருந்தேன்; ஆசிரியர் முக்கியமென சொல்லிய கேள்விகளுள் முதல் கேள்விக்கான பதிலை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே முற்று பெற்றது மணி ஓசையால்... அனைவரும் அவரவர்க்காய் ஒதுக்கப்பட்ட இடத்தினில் அமைதியாய் அமர்ந்தோம்; ஜன்னலோரம் என்பதாலோ என்னவோ பயம் வியர்வையாய் வெளியேறுவதை சற்று தாமதபடுத்திக் கொண்டிருந்தது... வெண்மையான விடைத்தாளும் விடை தெரியா வினாத்தாளுமாய்; நிசப்தமாக நகர்ந்து கொண்டிருந்தது என்னுடைய நிமிடங்கள்; நீ உள்ளேவர அனுமதி கேட்கும் முன்பு வரை... பதட்டத்துடன் எழுத துவங்குகிறாய், மின்விசிறி இல்லா வகுப்பறையில் உனக்காக இறக்குமதி செய்யபடுகிறது தென்றல் காற்று நம் திசைநோக்கியே... ஏதேனும் எழுதுவோம் என்ற முடிவுடன் எழுத ஆரம்பித்தேன் முதல் பக்கத்தினை; இடைமறித்து நிறுத்தப்பட்டதென்னுடைய எழுத்துக்கள் பேனா மையின்மையால்... என்ன செய்வதென எண்ணுகையில் சற்று தயங்கி உனை விழிக்க; எதிர்பாராமல் எதிரிட்டது உன் கை பேனாவுடன் எனை நோக்கியே... எளிய புன்முறுவலுடன் வாங்கி கொண்டு, முதல் மதிப்பெண் பெறுவோருக்கு பேனா பரிசளிப்பதாக ஆசிரியர் சொல்லிய

காதல் பிடிப்பு

படம்
  சட்டை பிடித்து என்னில்  சாய்ந்து கொள்ளட்டுமா என்கிறாய்? இந்த செல்ல திமிரும் எனை கொல்லும் சிரிப்பும் இப்படியே இருந்திடா தா  இனி.. காதலாகி நிறைந்திடுது இதயம் உன் கைபிடிதனில் சுழலுமென்   உலகம்... -ஈ.பிரபாகரன்

காதல் வாசல்

படம்
வெட்கத்தின் விழிம்பில் இருந்து விழுகிறாய்  நீ-என் மீது; காத்திருப்பின் அர்த்தமறிந்து  திறக்கபடுகிறது இதய  காதல் கதவுகள்; வாஞ்சையுடன்-நம் வரவுக்காக.... -ஈ.பிரபாகரன்.

கொஞ்சம் கற்பனை; மிச்சம் காதல்

படம்
எல்லோருக்கும் தனக்குள்  காதல் வந்தததை சொல்ல ஒரு பிரத்யேக பொழுது இருக்கும்.அது மஞ்சள் விதைக்கும் மாலை வேளையிலோ, மழை  பொழியும் சாலை ஓரத்தின் பார்வையிலோ, இல்லையெனில் பனி காற்றில் பாதி காலை வேளையென  ஏதோ ஒரு பொழுதாக இருக்க கூடும்.ஆனால் அனல் வீசும் மதிய வேளை; ஒரு மந்தமான சாதாரண மதிய பொழுதில் இருக்க கூடுமா என்ன ?  ஆம்... அன்று கல்வி வளர்ச்சி நாளாம்( பின்   அவள் சொல்ல தெரிந்து கொண்டேன் ) காமராஜர் பிறந்த நாள் :) பள்ளியில் வழக்கம் போல பேச்சு போட்டி கட்டுரை,கவிதை என நடந்து கொண்டிருக்கையில், காலை முதல் வகுப்பு முதலே வழக்கமாய் பரிசுகள் வாங்குவோர் சென்று விட நானும் நண்பர்களும்  எப்படியோ இன்றைய பொழுது எந்த பாடத் தேர்வும் இல்லையென அரட்டை அடித்து  கொண்டிருந்தோம்..அப்பொழுது தான்.. மதிய இடைவேளைக்கு முந்தய வகுப்பு. இது போன்ற சந்தோஷ நாட்களில் இப்படி எதிர்பாரா திருப்பங்களும் அமைந்தே இருக்கும் என்பதை நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.திடீரென்ற அந்த அறிவிப்பு அதுவரை இருந்த எங்கள் முகத்தின் சந்தோசத்தை துடைத்து போட்டு  பயத்தை பூசி சென்றது...  பேப்பர எடுங்க எல்லாரும், இருக்கிறவங்க எல்லார்த்துக்க

காதல் வானம்

படம்
விழி பார்த்து -உன் கை விரல் கோர்த்து விடியா இரவில் -என் காதல் விடை தேடியே... விலகும் மேகம் -அதில் விளையாடும் விண்மீனும் வீசும் நிலவொளியும்-இதழ் வழிந்தோடும் வாடைகாற்றே ... விசையின்றி இசையுது -பாதம் விளக்கின்றி எரியும்  -விழி தீபம் விதியறியா அசைவில் -காதல் இதயம் வானெங்கும்  காதல் சுவாசமே...                                                                      -ஈ.பிரபாகரன்
படம்
காதல் அடையாளம் நான் சிரித்து பேசுகையில்  நீ சரிந்து பார்க்கிறாய் எனை சாய்த்து விடுகிறாய்;  சட்டென்று நான் மௌனிக்க ஏதோ சொல்லி சிரிப்பு  பூக்களை தூவி விடுகிறாய்; என் மூச்சு காற்றில்  முகம் புதைத்து நிற்கிறாய்  காலம்  கரைந்தது அறியாமலாய்;     இப்படி எனக்கான  ஒவ்வொரு அடையாளங்களும்  என்னை அறியாமலேயே   உன்னில் தெரிவதை  கண்ட பொழுதே   நீ  என்னில் கலந்தாய் காதலாய் நுழைந்தாய்;   சற்று தாமதப்பட்டு தான்  முற்றிலும் என் இதயம்  பறிக்கப்பட்டு உன்னில்  விதைக்கப்பட்டதை உணர்ந்தேன்...                                                                                             -ஈ .பிரபாகரன்