காதல் அடையாளம்



நான் சிரித்து பேசுகையில் 
நீ சரிந்து பார்க்கிறாய்
எனை சாய்த்து விடுகிறாய்; 

சட்டென்று நான் மௌனிக்க
ஏதோ சொல்லி சிரிப்பு 
பூக்களை தூவி விடுகிறாய்;

என் மூச்சு காற்றில் 
முகம் புதைத்து நிற்கிறாய் 
காலம்  கரைந்தது அறியாமலாய்;   

 இப்படி எனக்கான 
ஒவ்வொரு அடையாளங்களும் 
என்னை அறியாமலேயே  

உன்னில் தெரிவதை 
கண்ட பொழுதே  
நீ  என்னில் கலந்தாய்
காதலாய் நுழைந்தாய்;  

சற்று தாமதப்பட்டு தான் 
முற்றிலும் என் இதயம் 
பறிக்கப்பட்டு உன்னில் 
விதைக்கப்பட்டதை உணர்ந்தேன்...
                                                                                            -ஈ .பிரபாகரன் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்