இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வசந்தகுமாரனின் பேனா

மாதாப்பூரின் உயர்தர நகரில் உள்ளிருக்கும் அழகின் ராட்சதமாகிப்போய் எழும்பி உயர்ந்து நிற்கும் பல பெட்டகமாக மடிக்கப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதியின் வாயிலில் வசந்தகுமாரனும் இன்ன சிலரும் வரிசையாய் நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். பெயர், அலைபேசி எண், அடையாள அட்டை ஏதேனும் ஒன்று, யாரை அணுக முனைகிறீர்கள், இவை எல்லாவற்றையும் எழுதி முடிக்க பேனா வேண்டும் வசந்தகுமாரனுக்கு. எறும்பு நகர்வது போல வரிசை சீராக தொடர்ந்து முன்னேறுகிறது தன்னுடைய முறை வருவதற்கு இன்னமும் இரண்டுபேரை கடந்தாக வேண்டும். அதற்குள் தனக்கு முன் நிற்கும் யுவதியிடம் பேனா வேணும் என்பதை எப்படி கேட்கலாம் என ஆங்கில வார்த்தைகளை கட்டமைக்க முயற்சிக்கையில் ஒத்திகையில் மொழி மறந்து சொற்கள் இல்லாமல் போகிறது இதோ இவன் முறை வந்தேவிட்டது அத்தனை பதட்டத்தில் இருந்தவனிடம் மிக நிதானமாக இவனைப் பார்த்து அவள் கேட்டாள் பேனா வேணுங்களா?

ஒரு முடிவிலா நீள் கவிதை

படம்
நள்ளிரவினை மெல்ல கடந்து அதிகாலையை தழுவ துவங்ககொண்டிருந்தது வானம்; யாருமற்ற அந்த எம்.ஜி.ஆர் சாலையில் நானும் அவளும் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறோம். மாலை நேர இடைவேளையின் போது ஏதோ வேடிக்கையாக நடந்த ஒரு நிகழ்வினை சொல்லி சிரிக்கிறாள்; இந்த ஞாயிறு குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறினாள். அடுத்தமுறை ஊரிலிருந்து வருகையில் எனக்கு என்ன வாங்கிட்டு வருவ ? என்று கேட்டாள் ; இன்னமும் ஏதேதோ கதைத்துக்கொண்டு வருகிறாள், என் தோள்கள் பற்றியபடி; இதோ அவளின் ஹாஸ்டல் வந்துவிட்டது. அம்மாவின் கைகளை விட்டு பள்ளி உள்ளே செல்ல மறுக்கும் குழந்தையை போல முகத்தை வைத்துக்கொண்டு "டாட்டா " என்கிறாள் இதழ்களில் புன்முறுவலுடன். ஏதும் சொல்லாமல் பதில் புன்னகையுடன் விரலசைத்து, விடை பெறுவதாய் தலை ஆட்டி திரும்பினேன் நான். அக்கணம் மட்டும் ஒரு முடிவிலா நீள் கவிதையை போல் இருந்தது எனக்கு.