இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்திரப் பாவை

படம்
பாதி சாய்த்த இரு  கோடுகளை இணைத்து  மேற்கூரையிட்டு  அதன்மேல்  புகைபோக்கி வைக்கிறாய்... செவ்வகங்களை குறுக்கே  கோடிட்டு ஜன்னல் செய்கிறாய்... 'ப' வை தலைகீழாக்கி  'வா' வென வாசல் கதவுகளை  திறந்தே வைக்கிறாய்... இருபுறமும் தலை சாய்த்து  வரவேற்பை உதிர்க்கிறது  கொன்றை மரப்பூக்கள்  சிவப்பும் மஞ்சளுமாய்... மலையின் இடுக்கில்  சூரியனுடன் ஒளிந்து  விளையாடுகிறாய்... ஆறுகளை எப்போதும்  அசுத்தமின்றியே காண்பிக்கிறாய்... பட்டாம் பூச்சிகளை  பறக்கவிட்டு  பக்கத்தில் தேன் மலர்களை  சேர்த்தே செடியிடுகிறாள்... வண்ண மீன்கள் நீந்திட  வெண்பக்கம் முழுதும்  நீல நீரிட்டிருக்கிறாய்... பறவைகளை எப்போதும்  காற்றிலே மிதக்க வைத்து  பூமியே சுதந்திர கூண்டென்கிறாள்... நீண்ட காகிதத்தில் எல்லாமும்  நிறைத்து வைக்கிறாய் நீ  இயற்கையின் ஓவியமாக; பின் மேற்புறத்தின்  மத்தியில்  தலைப்பூ இட்டு  இடப்பக்கத்தின் எதிரில்  கீழ்வாட்டில்...  பச்சை நிற கோலமிட்டு  மஞ்சள் பூக்களை உன்னை  சுற்றி தூவிக் கொள்கிறாய்...  ப.சுசீலா  5-

மழைப் பூக்கள்

படம்
#நீ எப்போதும் முத்தமிட்டு தான் துவங்குகிறாய் உன் சொ(ற்)ட்டுபொழிவினை #நீ வந்தால் மட்டும்  தவிர்க்கவே முடிவதில்லை  (க)விதைகள் துளிர் விடுவதை #உன்னை தொட்டு  விட்டு வருவதாய்  மேகங்களிடம் பொய்க்கிறேன் #நீர் திவலைக்குள்  தொலைந்து போகிறது  முதல் மழை துளியாய் #நிழல் மரங்களை மழலையென  ந(நி)னைத்து மறக்காமல் நீ  தலை துவட்டிச் செல்கிறாய்  # யாராய் இருப்பினும் தப்புவதில்லை நீர் ஈரம் தழுவி அணைத்து பின் கட்டிக் காதல் கொள்கிறாய் . -ஈ.பிரபாகரன்.

சண்டைத் தோழி

#பொய்க் கோபங்களில் கூட  நிஜமாகவே நீ அழகு தான்... #செல்லச் சண்டை இடுகையில்  நீ சொல்லா மொழி ஏராளம்... #சின்னதாய் சிணுங்கி சட்டென  துடித்து இசைக்கிறாய்    இதய மோதலில்... # நீண்ட மௌனம் நின்று  நிசப்தமாகிறது சத்தமில்லாமல்  நீ என்னில் சாய்கையில்... #பிரிதலின் பின் நெருங்கி  என் கைபிடித்து நடக்கையில்  சற்று தூரமாகிறது சுற்றும்...

தாவணி தேவதை தொகுப்பு

படம்
#கருங்குழல் கோதி பச்சை ரிப்பன் கட்டி செண்பகமாய் மலரவைத்து செல்கிறாய்... #நீ பின்னி முடிந்த கூந்தலில் சிக்கிக்கொள்கிறது என் இதயநூல்... #புருவங்கள் சுருக்கி கீழிதழ் சரித்து பார்த்து; ஏமாற்றங்களை கூட மிக அழகாக தான் விவரிக்கிறாய்... #புருவங்கள் உயர்த்தி கண்கள் விரித்து; இதழ்குவித்து கோபத்தை கொல் கிறாய்... #நீ இட்ட சாந்து பொட்டு ஞாபகமாய் இன்னும் மிச்சமிருக்கிறது; படிமமாய் காய்ந்துபோன நெடிய சிறு குச்சியில்... #லாவகமாய் கண்மையிட்டு; இதயத்தில் இலகுவாய் மையலை தடவுகிறாய்... #சன்னமான மூக்கின்மேல் பூத்திட்ட மின்னிடும் ஒற்றைக்கல் மூக்குத்தி... #தலையாட்டி நடனம் கற்கிறது காது மடல்களில் தொங்கும் தோடுகள்... #இனிப்பாய் தெவிட்டுகிறது இதழ்கள் எப்போதும்; உன் மிட்டாய் சிரிப்புகளினால்... #உன் தெற்றுப்பல் சிரிப்பினை தெளித்து; எழுப்புகிறாய் காலை கனவுகளின் விடியலில்... #பூக்களின் மௌனங்களை நீ பேச கேட்கிறேன் மன(ண)ம் விட்டு... #கழுத்தினில் மாட்டி பற்களினாலும் இதழ்களாலும் கடித்து தண்டிக்கப்படுகிறது தங்கச் சங்கிலி... #கண்ணாடி வளையலிட்டு கைகள் குலுக்குகிறாய்; சத்தமில்லாமல் சில்லுகளானது என் இதயம்... #மெல்லிய விரலி

மௌன கனவு

படம்
நீயும் நானும்  துயில் கொண்ட பின்  பேசத் துவங்குகிறது  உன் மௌனங்கள்  என் கனவுகளிடம்... விடியல் வரை  மொழியற்ற பேச்சும்  எல்லையில்லா தூரமுமாய்    பாதங்களின்றி பயணிப்பது  நம் காதல்கதை தான்... நேற்றைய நினைவோ  நாளைய நிகழ்வோ  எதுவாயினும் அதுவே  இன்பங்களை தேடி  இதயமதில் கூடும்...  -ஈ.பிரபாகரன்