இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னடா ? என அவள் பேச ஆரம்பிக்கிறாள்

படம்
முன் நகர்ந்து போவதை தவிர வேறு எதுவும் வழியும் இல்லை அவனுக்கு; இதோ இன்னும் சிறு தூரம் தான், அருகில் நெருங்க நெருங்க பேச நினைத்த எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது அவனால் ; இப்பொழுது அவனின் பார்வை குவியத்தில் நன்றாக தெரிய தொடங்கியது அவளின் முகம்; எண்ணெய் பிசுக்கேறிய கூந்தலில் ஒட்டியிருக்கும் பஞ்சாலையின் வெள்ளை பிசிறுகள் காற்றில் பறக்க முயற்சித்துக் கொண்டிருந்தன; இதோ புன்னகைகளின் பரிமாற்றத்துடன் அவளருகில், அமர்கிறான் அவனுக்கு எப்படியேனும் இந்த முறை காதலை பேச வேண்டும் அவளிடம் அப்போதைக்கு அது மட்டும் தான் தோன்றியது. என்னடா ? என அவள் பேச ஆரம்பிக்கிறாள் ... கைகளால் கடற்கரையின் மணலில் இதயம் வரைந்து கொண்டே...