இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழை நாட்கள்

படம்
ஊதா நிற  குடை பிடித்து நாணத்தால் நனைத்துவிட்டு; நடந்து செல்கிறது  எனக்கான மழை. உன்னுடன்  பேசத்தான் உடைந்து  விழுகிறது ஊடல் துளிகள். எல்லா துளியிலும் என்மேல் விழுகிறது உனக்காக தூவும் காதல் மழை  பூக்களாய். நீ விட்டுசென்ற மௌனங்களை முத்தமிட்டு நிரப்புகிறது மழை. ஆம்  எல்லோரும்  நனைந்து போகிறார்கள்; நீ மட்டும் தான்  நனைத்துவிட்டு போகிறாய். ஈ.பிரபாகரன்.

குறிப்பற்றவை

படம்
தேவதை நீ பூங்கா இருக்கையில் விட்டுச் சென்றதன் ஏக்கத்தில்;  பூக்கள் தான் சொல்லியது என்னிடம் உன் பெயர் தேவதையென்று... அழகான டீச்சர் 1.நீங்கள் தான் சொல்லித் தந்தீர்கள் அடிக்காமல்; அழகாக எழுதுவது எப்படியென்று... 2. திருத்தவே முடியாதென்ற என் கையெழுத்தை திருத்தியதை திருப்பி பார்க்கிறேன் ஞாபகங்களின் பக்கங்களில்... 3.துளி புன்னகை வீசி என்னடா ஆச்சு என கேட்கையில் ஒரு கணம் அம்மாவாகி விடும் தேவதை தான் டீச்சர்கள்..   ஸ்கூட்டியில் பெண் என்னைச் சட்டென கடந்து செல்லும் வசீகரம் உன்னை பிடிக்கவே; பிடிக்கிறேன் அவசரமாய் வேகம்... ஹீல்ஸ் 1.உன் கால்களின் மௌனங்கள் டக் டக்கென உடைந்து இசைக்கிறது 2.நீ நடக்கையில் தான் நிசப்தங்களின்   சப்தம் கேட்கிறது... க்ளிப் பல் உன் தெற்றுப்பல் சிரிப்பினைக்கூட சிறை போட்டு சில்லுகலாய் உதிர்க்கிறாய்... ஜீன்ஸ் குர்தா பிடித்தமான உடைகளை நீ அணிந்து வருகையில் எனக்கும் சற்று பிடித்துத்தான் போகிறது உயிர் சுற்றிப்பற்றும் காதல் குரொமொசோம்களால்.. தியேட்டரில் பெண்கள் நீள்மான வரிசையில் காத்திருப்பதும் ஒரு வழிபாடு தான்.

க்ளிக்

படம்
உன் பாதி முகத்துடன் எனை திரும்பி பார்க்கும் பொழுதுகளில்; இன்னும் ஒருமுறைகூட தவறியதில்லை நான்; உன் ஒருபாதி புன்னகைகளை சேகரிப்பதை... தவறான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஒளிச்சிதறல் யாவும் உன் விழி உமிழ்ந்த காதலின் மிச்சம்... நீ பேசாத மௌனங்களை என்னவாயிருக்குமென எண்ணுகிறேன்; ஏதோ ஒரு பக்கமாக நீ திரும்பி அமர்ந்திருக்கும் ஒரு ஒளிப்படத்தில்... எவ்வித பாவனைகளும் இல்லாத உன்னுடைய இயல்பான புகைப்படம்தான் எடுத்ததிலேயே எனக்கு பிடித்தது.. ஒவ்வொருமுறையும் உனை பார்த்து கண் சிமிட்டும் போதெல்லாம் பதில் புன்னகை தர தவறியதில்லை நீ; எனக்கு மட்டும்... ஈ.பிரபாகரன்.