மழை நாட்கள்

ஊதா நிற 
குடை பிடித்து
நாணத்தால் நனைத்துவிட்டு;
நடந்து செல்கிறது 
எனக்கான மழை.

உன்னுடன் 
பேசத்தான்
உடைந்து விழுகிறது
ஊடல் துளிகள்.

எல்லா துளியிலும்
என்மேல் விழுகிறது
உனக்காக தூவும்
காதல் மழை 
பூக்களாய்.

நீ விட்டுசென்ற
மௌனங்களை
முத்தமிட்டு
நிரப்புகிறது
மழை.

ஆம் 
எல்லோரும் 
நனைந்து போகிறார்கள்;
நீ மட்டும் தான் 
நனைத்துவிட்டு போகிறாய்.

ஈ.பிரபாகரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்