இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னமும் மிச்சமிருக்கும் காதல் கவிதைகள்

* நகம் கடித்தபடி  நீ சிந்திக்கிற காட்சி ஒரு ஹைக்கூ * அதிகாலைப் பனியில் நனைந்திருக்கும் அரும்பாத பூக்கள் உனது இதழுதிர்க்கும் புன்னகையில் நுகர்கிறது நறுமணத்தை * நீ கையில் பிடித்திருக்கும் ஊதா நிற பட்டன் குடையை காற்று கலைக்கையில் அதனை சரிசெய்யும் பொழுதிலான உனதந்த முகபாவனைகளுக்காகவேனும் இன்னொருமுறை வீசிவிட்டுப் போகட்டும் காற்று * எப்பொழுதேனும் அரிதாக எதிரினில் கடந்து செல்கையில் காது மடலோரமாய் நீளும் கற்றைத் தோகையை சரி செய்வது போல யதார்த்தமாய் என் மீது சட்டென கடத்திப்போகும் உனது ஓரவிழிகளின் ஒரு நொடி ஜோடிப்பார்வைகள் *