இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனப்படுவது யாதெனில்-II

😍 இப்போதைக்கு கொஞ்சம் புன்னகைகள் கடன் கொடு; காதலை பிறகு பார்க்கலாம் 😍 நீயும் நானும் சேர்ந்து மெதுவாக நகரும் இந்த வரிசை இன்னும் கொஞ்சம் நீட்சித்திருக்கலாம் 😍 கொஞ்சமும் புன்னகைக்காமல் சற்று அனாயசமாக புருவம் துருத்தி நீ பார்க்கும் பொழுதுகள் 😍 அவளின் பேரன்பின் பிரியம் நிறைந்த அந்த ஒரு பெரும் புன்னகைப்படம் பிரதியெடுக்கவியலாதொரு மீள்பிம்பம் 😍 இந்த அர்த்தஜாமத்தில் விழிகளில் இதயம் வைத்து நீ அனுப்பும் அந்த ஒற்றை குறுஞ்செய்தி <3 இன்றைய மாலைநேர தேநீர் இடைவேளையில் நீ என்னை கடந்து சென்ற நிமிடங்களை சிருகச் சிருக இப்போது மீட்கிறேன்; பொழியும் பெருமழையினை சொட்டுச் சொட்டாக ஒரே கோப்பையில் மொத்தமாக நிரப்புவதைப் போல <3 குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் கோவப்படு; புருவங்கள் சுருக்கி கழுத்தை பக்கவாட்டில் திருப்பிக்கொள்கையிலெல்லாம் தேவதையில் இருந்து குழந்தையாய் உருமாறும் மாயங்கள் யாவும் உன் முகத்தில் உனக்கே தெரியாமல் நிகழ்கிறது <3 😍 காத்திருப்பு நாற்காலியில் அமர்ந்தபடி, உனை கடந்து செல்லும் என்னை லேசாக தலை சாய்த்து பா

ஒரே கனா

தகிக்கும் மதியத்தில் ஒரு குவளை நீருக்கு காத்திருக்கும் அவனது தொண்டைக்குழிக்குள் கனன்று எரிந்தபடி இருக்கிறது ஒரு நெருப்புக் கனவு. தன்னை நோக்கி சிரிப்பவர்களை புன்னகையுடன் கடந்து செல்கிறான். மாற்றத்தின் வசந்த பாதைகளை தனியனாக அவனே தகவமைக்கிறான் . விரக்தியின் விழிகளை மறைத்து எப்போதும் போல புன்னகைக்கிறான். இப்போதைக்கு சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறான் கொஞ்சம் குளிர்ந்து மீண்டும் கனல்கிறது அந்த ஒரே கனா

செங்கொடியாகிய நாங்கள்

எல்லா  பெருங்கனவுகளும்  அடங்கியபின் ஒரு எளிய சமரசத்தினால் எல்லாவற்றையும் மறக்கடிக்க முடியுமென  நினைக்காதீர்கள் தோழமைக் கட்சிகளே... செங்கொடிகள் நெருப்பு மலர்களை பற்றியபடி உங்களை நோக்கி புன்னகைத்து கொண்டிருக்கிறார்கள்... ஒரு யுக மாற்றத்தை தடைகளை உடைத்து நடுச் சாலையில் எழுத ஆரம்பித்துவிட்டனர்... சொகுசு காரில் இருந்து இறங்காமல் திரும்பிச் செல்வதே உங்களுக்கு தற்போதைக்கு நலம் பயக்கும் அரசியலாகும்... எங்களின் மெல்லிய இதழ்களில் ஆக்ரோஷ கேள்விகளை நீங்கள் இதுவரை கேட்டிருக்க மாட்டீர்கள் தான் என்செய்வது இம்முறை புரட்சி எங்களிடமிருந்து துவங்கியதாய் எண்ணிக்கொள்ளுங்கள் என் அருமை அரசியல்காரர்களே...