இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொன்றைப்பூக்கள் நிறைந்த தெரு

நடுத்தர வர்க்கத்தினர் நிறைந்த சென்னையின் எல்லா தெருக்களின் அமைப்பை போலத்தான் அந்த தெருவும் அப்படி ஒன்றும் விசேஷமானது இல்லை தான். தெருவின் அறிமுக அடையாளம் 'ஹாட் இட்லி' கடை அய்யாவும் அவரின் புன்னகை கலந்த வரவேற்புமே சினிமாவில் நடிக்க முயற்சிக்கும் அவரது மகன் வயதுள்ள அண்ணன் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் அனைவரின் முகத்திலும் நீங்கள் ஒன்றை பொதுவாக பார்க்கலாம் சந்தோசம் நிறைந்த அந்த முகங்கள்