இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஷ்க்கலேசன் கவிதை

படம்
பேருந்துக்காக காத்திருக்கும் இந்தப் பின்னிரவில் கலைந்து போன எனது கேசத்தில் மோதும் குளிர் காற்றைப்போலான உனது பேச்சின் குரல் ஓர் அசரீரி போல என் காதுகளில் மோகனமாய் ஒலிக்கத் துவங்குகிறது. இதோ இப்போது துளிர்க்கும் இந்த மழை வாசம் காலையில் நீ நெற்றியில் வைத்துவிட்ட திருநீறின் வாசனையைப் போலிருக்கிறது. வாய் வலிக்க அதிகம் பேசாத அளவான உன் உரையாடல்கள் தும்பைப் பூக்களை கற்றையாக கட்டியது போல புருவம் உயர்த்திச் சிரிக்கும் அந்தக் குறுஞ்சிரிப்பு. அட திகட்ட திகட்ட இன்னமும் ஆயிரம் இருக்கிறது சொல்வதற்கு. இப்போதைக்கு இன்னமும் பேருந்து வரவில்லை என்பதைத் தவிர..