இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோழியெனும் தேவதை

தவறாக பதில் கூறி நாக்கை வெளி நீட்டி 'த்' என்று கடித்து கண்களை சிமிட்டி சிரித்த  தமிழ்ச்செல்வி ! வெத்து பேச்சுக்கு கூட பத்து கோடி ரூபாய் விழுந்தது போல ஆச்சர்யத்தில் சிரிக்கும்  பவித்ரா ! எவ்வளவு பெரிய காமெடியாக இருந்தாலும் பல் கூட தெரியாமல் வாய் மூடிச் சிரித்த சுசீலா ! எல்லாம் நடந்து முடிந்தும் ஏதுமே நடக்காதது போல சீரியஸாகவே  சிரிக்கவே தெரியாத கவிதா ! இம்போசிஷன், பனிஷ்மென்ட் கொடுக்கும் போதெல்லாம் ஹை..யா.. ஜா..லி.. என இருபுறமும் நான்குமுறை தலையாட்டி சிரிக்கும் பூங்கொடி ! இவர்களெல்லாம்  இன்னமும் இப்படி சிரிக்கிறார்களாவென இப்போதும் கூட நினைத்து பார்க்கையில் எனக்கு சிரிப்பு வரவில்லை உதடுகள் மட்டும் சற்று வளைந்து பெருமூச்சொன்றை விட்டெழுந்தேன் நினைவுகளின் கனவுகளிலிருந்து... -ஈ.பிரபாகரன்.