தோழியெனும் தேவதை


தவறாக பதில் கூறி
நாக்கை வெளி நீட்டி
'த்' என்று கடித்து
கண்களை சிமிட்டி சிரித்த 
தமிழ்ச்செல்வி !

வெத்து பேச்சுக்கு கூட
பத்து கோடி ரூபாய்
விழுந்தது போல
ஆச்சர்யத்தில் சிரிக்கும் 
பவித்ரா !

எவ்வளவு பெரிய
காமெடியாக இருந்தாலும்
பல் கூட தெரியாமல்
வாய் மூடிச் சிரித்த
சுசீலா !

எல்லாம் நடந்து முடிந்தும்
ஏதுமே நடக்காதது போல
சீரியஸாகவே 
சிரிக்கவே தெரியாத
கவிதா !

இம்போசிஷன்,
பனிஷ்மென்ட்
கொடுக்கும் போதெல்லாம்
ஹை..யா..
ஜா..லி..
என இருபுறமும்
நான்குமுறை
தலையாட்டி சிரிக்கும்
பூங்கொடி !

இவர்களெல்லாம் 
இன்னமும்
இப்படி
சிரிக்கிறார்களாவென
இப்போதும் கூட
நினைத்து பார்க்கையில்

எனக்கு சிரிப்பு வரவில்லை
உதடுகள் மட்டும்
சற்று வளைந்து
பெருமூச்சொன்றை
விட்டெழுந்தேன்
நினைவுகளின்
கனவுகளிலிருந்து...

-ஈ.பிரபாகரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்