தாவணி தேவதை தொகுப்பு
#கருங்குழல் கோதி பச்சை ரிப்பன் கட்டி செண்பகமாய் மலரவைத்து செல்கிறாய்... #நீ பின்னி முடிந்த கூந்தலில் சிக்கிக்கொள்கிறது என் இதயநூல்... #புருவங்கள் சுருக்கி கீழிதழ் சரித்து பார்த்து; ஏமாற்றங்களை கூட மிக அழகாக தான் விவரிக்கிறாய்... #புருவங்கள் உயர்த்தி கண்கள் விரித்து; இதழ்குவித்து கோபத்தை கொல் கிறாய்... #நீ இட்ட சாந்து பொட்டு ஞாபகமாய் இன்னும் மிச்சமிருக்கிறது; படிமமாய் காய்ந்துபோன நெடிய சிறு குச்சியில்... #லாவகமாய் கண்மையிட்டு; இதயத்தில் இலகுவாய் மையலை தடவுகிறாய்... #சன்னமான மூக்கின்மேல் பூத்திட்ட மின்னிடும் ஒற்றைக்கல் மூக்குத்தி... #தலையாட்டி நடனம் கற்கிறது காது மடல்களில் தொங்கும் தோடுகள்... #இனிப்பாய் தெவிட்டுகிறது இதழ்கள் எப்போதும்; உன் மிட்டாய் சிரிப்புகளினால்... #உன் தெற்றுப்பல் சிரிப்பினை தெளித்து; எழுப்புகிறாய் காலை கனவுகளின் விடியலில்... #பூக்களின் மௌனங்களை நீ பேச கேட்கிறேன் மன(ண)ம் விட்டு... #கழுத்தினில் மாட்டி பற்களினாலும் இதழ்களாலும் கடித்து தண்டிக்கப்படுகிறது தங்கச் சங்கிலி... #கண்ணாடி வளையலிட்டு கைகள் குலுக்குகிறாய்; சத்தமில்லாமல் சில்லுகளானது என் இதயம்... #மெல்லிய விரலி
அருமை.. எனக்கு தெரியும் அங்கே இருப்பது திறந்த கதவு என்று..!!
பதிலளிநீக்கு