இன்னமும் மிச்சமிருக்கும் காதல் கவிதைகள்
<3
அவளறிந்த
ஆகச்சிறந்த
காதல் கலைகளில்
அதிபிரதானமானது,
மிக அனாயசமாக
ஒரு மந்தகாசப் புன்னகையை
உதிர்த்து
எனைச் சாய்ப்பது.
<3
நிசப்தம் கசியும்
இந்தப் பின்னிரவில்
தூக்கம் தொலைத்து
கனவுகளற்று கதைக்கும்
நமதிந்த இலக்கற்ற உரையாடல்கள்
<3
உன்னுடைய
கேபினின் டேபிளில்
ஒரு கையினை மட்டும்
ஆகஸ்மத்தாக
கன்னத்தில் வைத்து
'என்னடா 'என்பது போல்
எதிரில் நிற்க்கும்
எனை பார்க்கும்
உனதந்த நிமிர்ந்த விழிகள்.
<3
பின் அந்திப்பொழுதுகளில்
உன் மீதான காதல்
நறுமணம் அரும்பி
ததும்ப துவங்குகிறது;
இன்றைக்கு
நாம் ஒன்றாக அருந்திய
காபியின்
ஒவ்வொரு மிடறு போல..
<3
மழை இரவுக்கு பிந்தைய
அதிகாலையின்
ஏகாந்தமான
குளிர் காற்றின்
ஸ்பரிசத்தினை போல
கைகள் பற்றி
என்
தோள் சாய்ந்திருந்த சமயம்...
<3
கருத்துகள்
கருத்துரையிடுக