காற்றில் கசியும் காதல்
*
டேய்ய்?
ஆச..ஆச...
நிஜமாவா?
ஆங்..பொய்யி..
ம்.
இப்ப என்ன வேணும் உனக்கு??
ச்சீ!
ம்ஹும்!
மாட்டேம்போ.
இப்ப இதொன்னுதான் கொறைச்சல்;
போதும் போதும்!!
இப்படி
இன்னும்
ஆயிரம் ஆயிரம்
ஒரு வரி கவிதைகளை
அவளிதழால்
மட்டுமே
சொல்ல முடியும்!
*
காத்திருப்பின்
தாமதங்களுக்கு
சமாதானிக்க
நான்
தொடங்கையில்
காலிறங்கி
கெஞ்சுதல்
எனக்காகியும்
பின்
ஊடலின்
உச்சத்தில்
கால் மீது காலிட்டு
காதல்தாங்கி
கொஞ்சுதல்
உனக்காகியும்
போகிறது
எப்பொழுதுமே!
*
பேருந்துகளில்
இருக்கையை
ஒட்டிய
பக்கவாட்டு
கம்பியினை
ஒருகை
மட்டும்
கோர்த்து
பிடித்துக்கொண்டு
பயணிப்பதும்
ஒருவித
அழகுதான்
என்பது
நீ
பற்றிப்பிடித்திருந்த
கம்பிகள்
என்னிடம்
மட்டும்
சொன்ன
இரகசியம்!
*
ஒரு
இளமதிய
பொழுதினில்
சந்தித்து
நமக்கு மட்டும்
தனியான
உரையாடலை
தொடங்க
அருகிலிருந்த
ஐஸ்கிரீம்
கடையை
விட்டு
எதிரில்
இருந்த
நெடுஞ்சாலை வேப்பமரத்தின் கீழ்
கேரியர் நிறைந்த இளநீருடன்
யாருமின்றி
நின்ற
சைக்கிள்காரரை
நோக்கி
அழைத்துச் சென்று
இருவரின் கையிலும்
இள(மை) நீ(ர்)உடன்
இயல்பாக
நீ பேசியது தான்
கேட்கிறது
இன்னமும்
இது தான்
முதல்முறை
என்பதுபோல
ஒவ்வொருமுறையும்!
*
இன்னும்
உன்னிடம்
எத்தனை
முறை
பேசினாலும்
கடைசியாக
அந்த
உரையாடலை
எப்படி
முடிப்பதென்பது
எப்பொழுதும்
மனதிற்கு
சற்று
சிக்கலாகவே
இருக்கிறது
இன்னமும்!
*
டேய்ய்?
ஆச..ஆச...
நிஜமாவா?
ஆங்..பொய்யி..
ம்.
இப்ப என்ன வேணும் உனக்கு??
ச்சீ!
ம்ஹும்!
மாட்டேம்போ.
இப்ப இதொன்னுதான் கொறைச்சல்;
போதும் போதும்!!
இப்படி
இன்னும்
ஆயிரம் ஆயிரம்
ஒரு வரி கவிதைகளை
அவளிதழால்
மட்டுமே
சொல்ல முடியும்!
*
காத்திருப்பின்
தாமதங்களுக்கு
சமாதானிக்க
நான்
தொடங்கையில்
காலிறங்கி
கெஞ்சுதல்
எனக்காகியும்
பின்
ஊடலின்
உச்சத்தில்
கால் மீது காலிட்டு
காதல்தாங்கி
கொஞ்சுதல்
உனக்காகியும்
போகிறது
எப்பொழுதுமே!
*
பேருந்துகளில்
இருக்கையை
ஒட்டிய
பக்கவாட்டு
கம்பியினை
ஒருகை
மட்டும்
கோர்த்து
பிடித்துக்கொண்டு
பயணிப்பதும்
ஒருவித
அழகுதான்
என்பது
நீ
பற்றிப்பிடித்திருந்த
கம்பிகள்
என்னிடம்
மட்டும்
சொன்ன
இரகசியம்!
*
ஒரு
இளமதிய
பொழுதினில்
சந்தித்து
நமக்கு மட்டும்
தனியான
உரையாடலை
தொடங்க
அருகிலிருந்த
ஐஸ்கிரீம்
கடையை
விட்டு
எதிரில்
இருந்த
நெடுஞ்சாலை வேப்பமரத்தின் கீழ்
கேரியர் நிறைந்த இளநீருடன்
யாருமின்றி
நின்ற
சைக்கிள்காரரை
நோக்கி
அழைத்துச் சென்று
இருவரின் கையிலும்
இள(மை) நீ(ர்)உடன்
இயல்பாக
நீ பேசியது தான்
கேட்கிறது
இன்னமும்
இது தான்
முதல்முறை
என்பதுபோல
ஒவ்வொருமுறையும்!
*
இன்னும்
உன்னிடம்
எத்தனை
முறை
பேசினாலும்
கடைசியாக
அந்த
உரையாடலை
எப்படி
முடிப்பதென்பது
எப்பொழுதும்
மனதிற்கு
சற்று
சிக்கலாகவே
இருக்கிறது
இன்னமும்!
*
கருத்துகள்
கருத்துரையிடுக