நீல நிறக் குடையும் மை கிளாஸ்மேட்ஸ் நோட்டும்

<3

ஏதோ ஒரு டாக்குமெண்டைத் தேட
என் அலமாரியினை மொத்தமாக கலைத்து தேடுகையில்
மை கிளாஸ்மேட்ஸ் நோட்டில் இருந்து கீழே விழுந்த  நாலாய் மடிக்கப்பட்டிருந்த அந்த காகிதத்தை  முதலில் எடுத்து வைக்கவே எத்தனித்தேன்.
ஏதோ யோசனையில் என்னவாயிருக்குமென பிரித்துப் பார்க்கையில் அது உனக்காக எழுதிய பாதியில் நிறுத்திய காதல் கடிதமது

இதோ இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன்

மழையின் கடைசித் துளிகளை  தன் பிஞ்சுக் கைகளை நீட்டி சேகரிக்கும் ஒரு சிறுவனைப் போல முடிவிலா அழகுடைய உன் சின்னச் சின்ன முக பாவனைகளை ஒவ்வொரு கண்ணியாய் கட்டி வைக்கிறேன்  என் மனதின் கனவுச் சாளரத்தில்  இதோ இன்றைய பொழுது நீ நடந்து வருகையில்  நேராக பிடித்து வந்த  அந்த நீல நிறக் குடையிலிருந்து உதிர்ந்த அந்த மழை நீரைப் பார்க்கையில்  தொடர்பற்று உனக்கு வரும்  ஏதோ ஒரு கனவில நீ தீவிரமாய் திருடனைத் துரத்திக்கொண்டிருக்கும் வேளையில் உனக்கெதிரே  நானும் ஏதேனுமொரு தருணத்தில் வரலாம் உன் அத்தனை முகபாவனைகளையும் ஒருசேர கொள்ளையடித்த குற்றத்திற்காக  கனவில் கைது செய்யப்படுகிறேன்
மறுநாள் புன்னகைத்தபடி சொல்கிறாய்

நேத்து...
வெட்கம்
நீ..
மீண்டும் வெட்கம்..

சற்று நாணம் கலைத்து
அடபோடா கடைசியா இப்படி ஈஸியா மாட்டிக்கிட்டயேடா...
திருடா

<3 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நானொரு மகிழ்பரி