துளி மழை

கொஞ்சம்
தாமதித்தே
வந்திருக்கலாம்
நான்;

இதேபோல
மாலைநேர
பொழுதொன்றில்
சாலையோர
நிழற்குடையில்
நிற்கையில்;

கடைசியாக
அவள்
தோள்சாய்ந்து
கைகள் பற்றி
பார்த்த
மழை ஞாபகம்
வராமலாவது
இருந்திருக்கும்.

ஒளிரும்
விளக்குகள்
எத்தனை
என
எண்ணிப்பர்த்ததும்;

பின்
மழை
நின்ற
சாலையில்
இருவரும்
நடக்கையில்
ஈரத்தின்
குளிர்காற்று
கொடுத்த
வெதுவெதுப்பு
இன்னமும்
உறைந்திருக்கிறது
என்னுள்;

இடது விழியின்
ஒரு ஓரமாய்
என்னை
எப்போதும்
நீ திரும்பிப்பார்ப்பதை
போல
ஒரு
சிறு ஞாபகமாய்
வந்துபோகிறது
இந்த மழை இரவு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்