நட்பெனும் பெயரற்ற மொழி

புகைப்படங்களில்
மட்டும்
இன்னும்
மின்னுகிறது
நாம்
விதைத்த
சந்தோசங்களின்
நிழல்..

எந்த
சுவாரஸ்யங்களும்
இல்லை தான்
என்றாலும்
சொல்லாமல்
இருந்ததாய்
நினைவில் இல்லை..

புன்னகைகளால்
மட்டுமே
நிரம்பிய
பொழுதுகளின்
மாலை வேளையினில்
கல்லூரி
வெளியே
தேநீருடன்
நின்று
மழை ரசித்தது...

படைசூழ
வலம்வருதலும்;
படிக்காத
தேர்வில்
எல்லோரும்
பெற்ற
தவறாத
வெற்றியும்...

சரியாக
ஞாபகமில்லை
ஆனால்
பேசிவிட்டு
கடந்துசென்ற
தருணங்களில்
எல்லாம்
சூடிய
பூவின் மணம்
விட்டுப்போனதில்லை
அவ்வளவு
எளிதில்..
அப்படியே உன்
யதார்த்தங்களின்
சிதறலாய்
இன்னும்
நீள்கிறது
நீ சூடியிருந்த
பூக்களை
காணும்
போதெல்லாம்...

ஒரு ஜன்னலோர
பயணத்தின்
கானலாய்
தொடர்பற்ற
காட்சி போல
இன்னும்
எத்தனை
பின்தொடரும்
நினைவுகளை
விதைத்து
செல்லும்
இந்த வாழ்க்கை...

ஒரு நாளின்
சுழற்சியில்
எத்தனை முறை
நினைத்து
பார்க்கிறோம்
எல்லோரும்;
உண்மையாக
கணக்கில்
வர மறுக்கிறது
அல்லவா??

-ஈ.பிரபாகரன்.




கருத்துகள்

  1. நன்று :) கவிதையின் சாரல் என்னை தோழமையில் நனைத்தது நம் கல்லூரி நினைவுகளோடு :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாவணி தேவதை தொகுப்பு

நிஜங்களின் நிழல்